ADDED : செப் 19, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலர் பாலன் தலைமை வகித்தார்.
அதில் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியை, சேலம் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, சேலம் மாவட்ட செயலர் மோகன் பேசினார். மேலும், 'மக்கள் கருத்தை கேட்ட பின், அரசு முடிவு எடுக்க வேண்டும்' என, கட்சியினர் கோஷம் எழுப்பினர். விவசாய அணி மாவட்ட செயலர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.