/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அத்திக்குட்டை சீரமைப்பு பணிக்கு கழிவு நீர் வெளியேற்றம்
/
அத்திக்குட்டை சீரமைப்பு பணிக்கு கழிவு நீர் வெளியேற்றம்
அத்திக்குட்டை சீரமைப்பு பணிக்கு கழிவு நீர் வெளியேற்றம்
அத்திக்குட்டை சீரமைப்பு பணிக்கு கழிவு நீர் வெளியேற்றம்
ADDED : டிச 31, 2024 07:38 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் அத்திக்குட்டை உள்ளது. அங்கு, நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கி, பச்சை நிறத்திற்கு மாறி, துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் குட்டையின், தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதியில் ஏழை மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கழிவு நீர் வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால், மல்லுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், டீசல் இன்ஜின் மூலம் அத்திக்குட்டையில் உள்ள கழிவு நீரை உறிஞ்சி, குழாய் மூலம் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் விட்டு வெளியேற்றி வருகிறது.
டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறுகையில், ''அத்திகுட்டையில், பூங்கா, நடைபயிற்சி தளம் உள்ளிட்டவை அமைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள, கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது,'' என்றார்.