/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தேர்தல் மன்னன்' 243ம் முறை மனுதாக்கல்
/
'தேர்தல் மன்னன்' 243ம் முறை மனுதாக்கல்
ADDED : ஆக 22, 2024 03:50 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர், ராமன் நகரை சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 65. இவர், 241 முறை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை, 10ல் நடந்தது.
அதில் போட்டியிட, ஜூன், 14ல், 242ம் முறை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி., தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த, 14ல் தொடங்கியது. அதன் இறுதி நாளான நேற்று, அப்பதவிக்கு போட்டியிட செகந்திராபாத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உபேந்தர் ரெட்டியிடம், 243ம் முறை, பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.