/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலி பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர்கள் போராட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 07:12 AM
சேலம்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், சேலம், உடையாப்பட்டி அருகே மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.அதில் மின்வாரியத்தில், 33,000க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை காலி பணியிடங்களை நிரப்புதல்; மின் விபத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு நிதி, 10 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கு அரசாணை வெளியிடுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். செயலர் ரகுபதி, பொது கட்டுமான வட்ட செயலர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், வட்ட பொருளாளர் வீரமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் தலைவர் சுந்தரராஜன், செயலர் ஜான்சன், மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி கோட்ட செயலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையம் முன் நடந்த போராட்டத்தில், மத்திய அமைப்பு நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.