/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்துக்கடைகளை அகற்றுங்க; மனமகிழ் மன்றம் கட்டாதீங்க! கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்
/
சந்துக்கடைகளை அகற்றுங்க; மனமகிழ் மன்றம் கட்டாதீங்க! கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்
சந்துக்கடைகளை அகற்றுங்க; மனமகிழ் மன்றம் கட்டாதீங்க! கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்
சந்துக்கடைகளை அகற்றுங்க; மனமகிழ் மன்றம் கட்டாதீங்க! கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2024 01:06 AM
சந்துக்கடைகளை அகற்றுங்க; மனமகிழ் மன்றம் கட்டாதீங்க!
கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்
சேலம், நவ. 24-
நவ., 1ல் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்படும். நடப்பாண்டு நிர்வாக காரணத்தால் அன்று நடத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக நேற்று நடத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டம் காரிப்பட்டி ஊராட்சி, ராஜீவ் காந்தி நகரில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் போதைப்பொருட்களுக்கு எதிராக தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது பெண்கள், காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சுற்றியுள்ள நேரு நகர், ஜே.ஜே.நகர் உள்பட, 6க்கும் மேற்பட்ட இடங்களில் சந்துக்
கடைகளை வைத்துக்கொண்டு, போதைப்பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதா என, கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு, 'காரிப்பட்டி போலீசார் தான் பதில் அளிக்க வேண்டும்' என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் தகவல்படி, போலீசார் அங்கு வந்தனர். பின் பெண்கள், 'சந்துக்கடைகளை அகற்ற வேண்டும்' என கோரினர். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், பெண்களில் சலசலப்பு அடங்கியது.
அதேபோல் மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த, கோனுார் ஊராட்சி சந்தை
தானம்பட்டியில் நடந்த
கூட்டத்துக்கு, தலைவர் கலையரசி தலைமை வகித்தார்.
அதில், '50 சென்ட் நிலத்தில் மனமகிழ் மன்றம் கட்ட சிலர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது' என, சிலர் மனு கொடுத்தனர். தொடர்ந்து கிராம மக்களும், எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, தலைவர் தெரிவித்தார்.
13ம் முறை தீர்மானம்
கெங்கவல்லி அருகே மண்மலையில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவி தேவகி தலைமை வகித்தார். அதில், 'மண்மலை ஊராட்சி, மொடக்குப்பட்டியில் நில வகைப்பாடு மாற்றாமலும், ஊராட்சியில் கட்டட வரைபட அனுமதி பெறாமலும், அரசு விதி மீறி சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள தனியார் பூச்சிக்கொல்லி ஆலையை அகற்ற வேண்டும்' என, 13ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மரியாதை
வீரபாண்டி ஊராட்சி, தோப்புக்காடு நர்சரி முன் நடந்த கூட்டத்துக்கு சேலம் மாவட்ட ஊராட்சி குழு செயலர் அருளாளர் தலைமை வகித்தார்.
அதில், 11 துாய்மை காவலர்கள், 3 துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கூறி, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; துாய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 'ஜல் ஜீவன்' திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன.
வீரபாண்டி ஒன்றிய பி.டி.ஓ., தனபால்(கி.ஊ.,), ஊராட்சி தலைவர் அருள், செயலர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.