/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
21ல் வேலைவாய்ப்பு முகாம்:முன்பதிவு அவசியம்
/
21ல் வேலைவாய்ப்பு முகாம்:முன்பதிவு அவசியம்
ADDED : நவ 16, 2025 01:56 AM
சேலம்;சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்டத்தில் வேலை தேடுவோருக்கு, கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 21 காலை, 10:00 முதல், 2:00 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
ஏராளமான தனியார் நிறுவனத்தினர், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளனர். அதனால் வேலை வழங்கும் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள், www.tnprivatejops.in.gov.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். விபரங்களுக்கு, jopfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

