/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரும்பப்பட்டி 'நகர்வனம்':நாளை திறப்பு விழா
/
குரும்பப்பட்டி 'நகர்வனம்':நாளை திறப்பு விழா
ADDED : நவ 16, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேர்வராயன் மலை அடிவாரத்தில் பறவைகள் ஓசையுடன், மூலிகை வாசத்தோடு, வனச்
சூழலை மக்கள் அனுபவிக்கும்படி, சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் குரும்பப்பட்டி காப்புக்காட்டில், 50 ஏக்கரில், 'நகர்வனம்' அமைக்கப்பட்டுள்ளது.
அதன் உள்ளே சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, நடைபயிற்சிக்கான பாதை, சைக்கிள் பாதை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையை ரசிக்க, ஆங்காங்கே கூரையினாலான குடிசைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகள் இடப்பட்டுள்ளன. இப்பணி நிறைவடைந்த நிலையில், நாளை காலை, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷசாங்க் ரவி திறந்து வைக்க உள்ளார். அதற்கு நுழைவு கட்டணம், 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

