/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இ.பி.எஸ்.,
/
இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 07, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: அ.தி.மு.க., பொதுச்செயலர், எதிர்க்கட்சி தலைவரான, இ.பி.எஸ்.,க்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை, மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது, 13 சி.ஆர்.பி.எப்., வீரர்கள், துப்பாக்கி, உபகரணங்களுடன் பாதுகாப்பு வழங்கினர். மேலும், இன்று முதல், அவர், பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்-துள்ளனர்.