/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு - நான்டேட் சிறப்பு ரயில் நீட்டிப்பு
/
ஈரோடு - நான்டேட் சிறப்பு ரயில் நீட்டிப்பு
ADDED : டிச 31, 2024 07:38 AM
சேலம்: ஈரோடு - நான்டேட் சிறப்பு ரயில், மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிரா மாநிலம், நான்டேட் நகரிலிருந்து, ஈரோடு வரை சிறப்பு வார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நான்டேட் - ஈரோடு சிறப்பு வார ரயில், வெள்ளிக் கிழமைகளில் மதியம், 2:20 மணிக்கு கிளம்பி, சேலம் வழியே சனிக்கிழமை மதியம், 2:00 மணிக்கு ஈரோடு வந்து சேர்கிறது. டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில், மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ள.
ஈரோடு - நான்டேட் சிறப்பு வார ரயில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, 5:15 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியே அடுத்த நாள் காலை, 7:30 மணிக்கு, நான் டேட் சென்றடையும். இந்த ரயில், மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.