/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் முன்னாள் படை வீரர்கள் புகார்
/
ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் முன்னாள் படை வீரர்கள் புகார்
ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் முன்னாள் படை வீரர்கள் புகார்
ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் முன்னாள் படை வீரர்கள் புகார்
ADDED : ஜன 05, 2025 01:20 AM
மேட்டூர், இந்திய ராணுவ முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களின் குறைதீர் கூட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த கரிகாலன்திட்டில் நேற்று நடந்தது. மெட்ராஸ் இன்ஜினியரிங் ரெஜிமென்ட் மைய ரெக்கார்ட்ஸ் அதிகாரி கர்னல் உன்னி
கிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில் முன்னாள் வீரர்கள்,
ஓய்வூதியம் பெறுவதில்
பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாக தெரிவித்து மனுக்கள் கொடுத்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, முன்னாள் முப்படை வீரர்கள் சமூக சேவை அறக்கட்டளை செயலர் வெள்ளியங்கிரி ஈசன், முன்னாள் படை வீரர்கள் செய்திருந்தனர்.
கிளையை மட்டும் அகற்றாமல் புங்க மரம் வெட்டி சாய்ப்பு
ஆத்துார், ஆத்துார் நகராட்சியில், 2001 - 06ம் ஆண்டுகளில், சாலை, முக்கிய தெருக்களில், 1,500க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. அதில் காமராஜர் சாலை, ஸ்டேட் வங்கி அருகே உள்ள புங்க மரக்கிளை சேதமடைந்ததாக கூறி, கூலித்தொழிலாளர்கள் மூலம் நேற்று அடியோடு வெட்டப்பட்டது.
கிளையை மட்டும் அகற்றாமல் அடியோடு வெட்டியதாக, மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் காமராஜர் சாலை, புதுப்பேட்டை, ராணிப்பேட்டை, உடையார்பாளையம், காந்தி நகர் பகுதிகளில் அடிக்கடி மரம் வெட்டப்படும் நிலையில், நகராட்சி அலுவலர்கள்
கண்டுகொள்வதில்லை என, மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறுகையில், ''மரம் மீது வாகனம் மோதியுள்ளது. மரத்தின் அடிவரை சேதம் இருந்ததால் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக கூறினர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்,'' என்றார்.

