/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரிவர பணியாற்றாத செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
/
சரிவர பணியாற்றாத செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
சரிவர பணியாற்றாத செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
சரிவர பணியாற்றாத செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 04, 2025 01:49 AM
வேலுார்வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகிய இருவரும், சரிவர பணியை செய்யாதது தெரியவந்ததையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் சுமதி, கடந்த வாரம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை உட்பட மலை கிராமங்களில் சாலை மற்றும் சிறுபால பணிகளை ஆய்வு செய்தார்.
பணிகளின் விபரம், தரம், மதிப்பீடு என பல நிலைகளில் அவர் செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு உரிய பதில் அளிக்காத நிலையில், அதற்கான எவ்வித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால் இருவரையும் கூடுதல் இயக்குனர் சுமதி 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.