/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்
/
பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்
பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்
பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்
ADDED : பிப் 11, 2025 07:32 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையத்தில் நேற்று, பா.ம.க., மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையி-லான கட்சியினர், கான்கிரீட் பீடம் அமைத்து, கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையறிந்த, ஆத்துார் டவுன் போலீசார், வருவாய்த்துறையினர் நேரில் சென்று,
அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என்றனர். மாவட்ட செயலர் உள்ளிட்ட கட்சியினர்,
'1989ல், கொடிக்கம்பம் இருந்தது. அதே இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது'
என்றனர். அதற்கு போலீசார், 'பழைய கொடிக்கம்பம் இருந்ததற்கான ஆதாரம் கொடுத்துவிட்டு, பணிகள்
மேற்கொள்ளலாம்' என்றனர். அப்போது, போலீசாருடன், பா.ம.க.,வினர் வாக்குவாதம் செய்-தனர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், 'அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லை
எனில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதன்பின், கொடிக்கம்பம் பீடம் மற்றும் கொடியை அகற்றிக்
கொண்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதி பர-பரப்புடன் காணப்பட்டது.