/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி
/
ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி
ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி
ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி
ADDED : மே 30, 2025 01:30 AM
ஏற்காடு :ஏற்காட்டில் ஒரு வாரமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனிடையே அடிக்கடி பெய்த மழையால் ஏற்காடு முழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. நேற்று இரவு, 7:30 மணிக்கு, ஏற்காடு - நாகலுார் சாலையில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் அருகே நாவல் மரம் முறிந்து, சாலை குறுக்கே விழுந்தது.
போக்குவரத்து குறைவாக இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், நாகலுார், பட்டிப்பாடி, வேலுார் உள்பட, 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். 2 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.