/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 16ல் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
/
வரும் 16ல் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
ADDED : ஏப் 14, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெயந்தி அறிக்கை: கன்னங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும், 16ல் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தாய்மார்களுக்கு, 22 வயது குறையாமல் இருக்க வேண்டும். முகாமுக்கு ஒரு நாள் முன்பே வர வேண்டும். பின், 24 மணி நேரம் கழித்து வீட்டுக்கு சென்று விடலாம்.
இதை செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில், 600 ரூபாய் வரவு வைக்கப்படும். இதற்கு வங்கி கணக்கு விபர நகலை வழங்க வேண்டும். விபரம் பெற, வட்டார சுகாதார புள்ளியியலாளர் விஜயகுமாரை, 97904 62426 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

