/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழிப்பாதை கேட்டு குடும்பத்துடன் விவசாயி தர்ணா
/
வழிப்பாதை கேட்டு குடும்பத்துடன் விவசாயி தர்ணா
ADDED : ஏப் 25, 2025 01:40 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பே.தாதம்பட்டி அடுத்த, டி.புதுாரை சேர்ந்த விவசாயி சுந்த ரேசன், 58. இவர் மனைவி, 2 மகன்கள், 2 மருமகள்கள், 3 பேரன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
விவசாயி சுந்தரேசன், அந்த மனுவில் கூறியுள்ளதாவது:- என் நிலத்திற்கு போதிய வழிப்பாதை இல்லாததால், அருகிலுள்ள நில உரிமையா ளரிடம் பேசி, பொது வழிப்பாதையை பயன்படுத்திக் கொள்ள கடந்த, 1977-ம் ஆண்டு ஒரு ஒப்பந்த பத்திரத்தை எழுதி, இதுநாள் வரை அந்த வழிப்பாதையை பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மீறி, பக்கத்து நில உரிமையாளரின் மகன்கள் தற்போது, அவ்வழி பாதையில் செல்லக்கூடாது என, தகராறு செய்து வருகின்றனர்.
அந்த வழிப்பாதையை பயன்படுத்த, எங்களுடைய, 48 சென்ட் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஒப்பந்தத்தின் படி, எங்களது நிலத்திற்கு செல்ல வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும். எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார்.

