ADDED : நவ 18, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:தலைவாசல்
அருகே, புத்துார் வடக்குகாட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த, சங்கர்
மகன் சதீஷ்குமார், 30. விவசாயியான இவர், அதே பகுதியை சேர்ந்த
பழனிவேல் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு பயிர் செய்து வந்தார்.
நேற்று மதியம், 3:00 மணியளவில், சதீஷ்குமார், தனது தந்தை சங்கருடன்
கிணற்றின் அருகில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தவறி
கிணற்றில் சதீஷ்குமார் விழுந்துள்ளார். மதியம், 3:35 மணிக்கு ஆத்துார்
தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மாலை, 4:05 மணிக்கு சென்ற
தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், இறந்த நிலையில்
சதீஷ்குமார் உடலை மீட்டனர்.தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
