ADDED : டிச 08, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
ஆத்துார், டிச. 8-
ஆத்துார் அருகே களரம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 40. விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், சண்முகம் தோட்டத்தில், டிராக்டர் கழுவ சென்றார். ஆனால் வீடு திரும்பாததால், நேற்று காலை முதல், குடும்பத்தினர் தேடினர். மதியம், 12:00 மணிக்கு, அந்த தோட்டத்தில் டிராக்டர் கழுவும் குழாய், ஒயருடன், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிந்தது. குடும்பத்தினர் தகவல்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.