/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி
/
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி
ADDED : ஜூலை 02, 2024 07:23 AM
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து மயங்கிய விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை ஏரிக்கரை அம்-மன்கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ராம-மூர்த்தி, 42. நேற்று இவர், கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி, அரை மயக்கத்தில் கிடந்த அவரிடம் போலீசார் நடத்-திய விசாரணையில், விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருந்-ததாவது: மனைவி சுமதியுடன் கருத்து வேறுபாடு உண்டாகி தனியாக வசிக்கிறேன். கடந்த, 5ல், விவசாய வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி-யபோது, பூட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, புகாரை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.