தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/3 பேரை வெட்டிய விவசாயி சரண்

3 பேரை வெட்டிய விவசாயி சரண்

3 பேரை வெட்டிய விவசாயி சரண்


ADDED : அக் 31, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:இடைப்பாடி, அரசிராமணி குறுக்குப்பாறையூர், ஒசுவன்காடை சேர்ந்த, விவசாயி நாச்சிமுத்து, 52. இவருக்கும், அருகில் உள்ள நிலத்தை சேர்ந்தவர் களான நாச்சியண்ணன், 60, காளியண்ணன், 72, ஜெய்சங்கர், 60, ஆகியோருக்கும் இடையே, தடம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, சொசைட்டிக்கு பால் கொண்டு சென்ற நாச்சிமுத்துவை வழி மறித்து, 3 பேரும், தடம் தொடர்பாக கேட்டுள்ளனர். அதில் தகராறு ஏற்பட்டது. அப்போது நாச்சிமுத்து, அவர் புல்லட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, 3 பேரையும் வெட்டினார்.

அவர்கள் காயம் அடைந்து, இடைப்பாடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி பெற்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு ஈரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கத்தியுடன் நாச்சிமுத்து, தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us