/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
/
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : ஜூலை 30, 2025 02:05 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி வழியே செல்லும் சுவேத நதியில் இருந்து, நடுவலுார் ஏரிக்கு நீர் செல்லும் பாதையை, நீர்வளத்துறையினர் புனரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நீரோடை இருபுறமும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் உள்ளன. தவிர கழிவு, இறைச்சி கழிவு, மனித கழிவை, ஏரி வாய்க்காலில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நேற்று, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் நாகலட்சுமி பேச்சு நடத்தி, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.