/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி
/
சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி
சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி
சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி
ADDED : டிச 05, 2024 07:53 AM
வீரபாண்டி: இரு மாவட்டங்களை இணைக்கும்படி கட்டப்பட்ட தரைப்-பாலம் சேதமான நிலையில், தற்போது மழைநீரில்
மூழ்கியுள்-ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி ஊராட்-சியில் புதுப்பாளையம் உள்ளது. அங்கிருந்து
நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் வழியே வெண்ணந்துார், ராசிபுரத்துக்கு சாலை செல்-கிறது. இதன் நடுவே,
திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 40 ஆண்டு-களுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில்
ஆங்-காங்கே விரிசல் விழுந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன், நாமக்கல் மாவட்ட எல்லை
பாலத்தில் அரிப்பால், பெரிய பள்ளம் விழுந்து பாதசாரிகள், இருசக்கர வாக-னங்கள் மட்டும் சென்று வந்தனர்.
சேலத்தில் ஒரு வாரமாக கொட்டிய மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது.
இதில் பள்ளம் மேலும் பெரிதாகியுள்-ளது. 4 நாட்களாக ஆற்றில் வரும் தண்ணீர் குறையாததால், தரைப்பாலம்
மூழ்கி பாதசாரிகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பாலத்தை சுற்றியுள்ள இரு மாவட்ட
விவசா-யிகள், வயல்கள், தோப்புகளுக்கு சென்று வர முடியாமல் சிரமப்ப-டுகின்றனர். குறிப்பாக விதை, உரம்,
விளை பொருட்கள் கொண்டு சென்று வரவும், தென்னந்தோப்புகளில் இருந்து டிராக்டர், லாரிகள் மூலம் தேங்காய்
எடுத்து வரவும் வழியின்றி தவிக்கின்றனர்.2 மாதத்துக்கு முன் கடிதம்இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, 'தரைப்பாலம் போக்குவரத்துக்கு
லாயக்கற்றது என, 3 மாதங்க-ளுக்கு முன்பே எச்சரித்து அறிவிப்பு செய்துள்ளோம். புதிதாக உயர்மட்ட பாலம்
கட்ட, 5 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்-படும். சேலம் மண்டல அளவில், 2 கோடி ரூபாய் மதிப்பு திட்-டங்கள் மட்டும்
செயல்படுத்த முடியும். அதற்கு மேல் எனில், தலைமையகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் தான் செய்ய
முடியும். இரு மாதங்களுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்ட அனு-மதி கேட்டு, சென்னைக்கு கடிதம்
அனுப்பியுள்ளோம். உத்தரவு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.