/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அதில், 'நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. வேளாண் துறை உள்ளிட்டவற்றில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை பறித்து வருகிறது. விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. இவற்றை திரும்பப்பெற வேண்டும் என, வலியுறுத்தினர். இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் செல்வராஜ், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.