/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரளி விலை கிலோ 20 ரூபாய்க்கு சரிந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
/
அரளி விலை கிலோ 20 ரூபாய்க்கு சரிந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
அரளி விலை கிலோ 20 ரூபாய்க்கு சரிந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
அரளி விலை கிலோ 20 ரூபாய்க்கு சரிந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
ADDED : செப் 09, 2025 01:43 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில், செடியிலிருந்து, 20 டன் அரளி மொக்கு அறுவடை செய்து, தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்
படுகிறது.
சேலத்தில் கடந்த 2, 3ல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சாதா அரளி, 240 ரூபாய், வெள்ளை, மஞ்சள் தலா, 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த, 4ல், சாதா அரளி 70 ரூபாய், வெள்ளை, மஞ்சள் தலா, 100 ரூபாய், 5ல், சாதா அரளி, 50 ரூபாய், வெள்ளை, மஞ்சள் தலா, 80 ரூபாய், 6ல், சாதா அரளி, 40, வெள்ளை, மஞ்சள் தலா, 80, 7 ல்,
சாதா அரளி, 20, வெள்ளை, மஞ்சள் தலா, 50, நேற்று சாதா அரளி, 20 ரூபாய், வெள்ளை, மஞ்சள் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
செடியிலிருந்து ஒரு கிலோ அரளி பறிக்கும் தொழிலாளர்களுக்கு, 50 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. அரளி விலை, 20 ரூபாய்க்கு சரிந்ததால், ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம்
ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பனமரத்துப்பட்டி அரளி வியாபாரி விக்னேஷ் கூறுகையில்,'' விசேஷ நாட்கள் இல்லாததால் விலை குறைந்துள்ளது. 15 நாட்களுக்கு இப்படியே இருக்கும். அடுத்த மாதம், 1, 2ல் ஆயுத பூஜை வருகிறது. அதற்கு முன்னதாக விலை உயர்ந்து விடும்,'' என்றார்