/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரளியை பறிக்காமல் செடியில் விடும் விவசாயிகள்
/
அரளியை பறிக்காமல் செடியில் விடும் விவசாயிகள்
ADDED : மார் 24, 2025 06:59 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி பயிரிடப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை அறுவடை செய்யப்படும் அரளி, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. பனி முடிந்து வெயில் தொடங்கியதால் அரளி உற்பத்தி அதிகரித்துள்ளது.
அதேநேரம் பங்குனியில் அரளி நுகர்வு குறைவாக உள்ளதால், விலை சரிந்துள்ளது. சேலத்தில் கடந்த, 20ல் சாதா அரளி, 50 ரூபாய், 21ல், 40, நேற்று முன்தினமும், நேற்றும், 30 ரூபாயாக சரிந்தது. அதேநேரம், கடந்த, 20 முதல் நேற்று வரை, மஞ்சள், செவ்வரளி தலா, 100 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ அரளி செடியில் இருந்து பறித்து, விற்பனைக்கு அனுப்ப விவசாயிகளுக்கு, 50 ரூபாய் செலவாகிறது. தற்போது அரளி விலை கிலோ, 30 ரூபாயாக சரிந்ததால், 20 ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், செடியில் இருந்து அரளி மொக்கு பறிப்பதை நிறுத்தி வருகின்றனர். வயலில் அரளி பூக்கள் மலர்ந்த நிலையில் காணப்படுகிறது.