ADDED : அக் 16, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மேற்கு தொகுதி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் உள்ள நிலையில், கடந்த, 15 நாட்களில் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறிகளும் சில இடங்களில் காணப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி, மாவட்டத்தில், கொசு மருந்து அடிப்பதோடு, டெங்கு, வைரஸ் தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
