/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது
/
போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது
போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது
போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது
ADDED : ஜூன் 01, 2025 01:54 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை, குமரன் காலனியை சேர்ந்த மாதையன் மகன் சாந்தகுமார்,37; மர அரவை மில் தொழிலாளி. திருமணம் செய்து கொள்ளாத இவரிடம், மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு, வீட்டின், 2வது மொட்டை மாடியில் துாங்கிக்கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவரது தாய் குப்பாயி, 55, சென்று பார்த்தபோது, மகனின் இடது காதில் காயம் ஏற்பட்டு, ரத்தம் உறைந்த நிலையில், சுயநினைவின்றி கிடந்தார். உடனே அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் காலை, 11:00 மணிக்கு இறந்துவிட்டார்.
அம்மாபேட்டை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில், மகனை, அவரது தந்தையே கொன்ற தகவல் வெளியானது.
தொடர்ந்து போலீசாரிடம், மாதையன் அளித்த வாக்குமூலம் வருமாறு: 'போதை'க்கு அடிமையான சாந்தகுமார், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்தார். சம்பவ நாளன்றும் தகராறு செய்தார். அந்த மன உளைச்சலில், அதிகாலை, 3:30 மணிக்கு, வீடு அருகே இருந்த கருங்கல்லை, 'போதை'யில் துாங்கி கொண்டிருந்த மகனின் தலை மீது போட்டதில் காயம் அடைந்தார். பின் கல்லை, இருந்த இடத்தில் வைத்துவிட்டு துாங்க சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் வழக்குப்பதிந்து மாதையனை கைது செய்தனர்.