/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி மீது பைக் மோதி தந்தை, மகன் பலி
/
லாரி மீது பைக் மோதி தந்தை, மகன் பலி
ADDED : நவ 05, 2024 06:35 AM
சேலம்: சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 52; பானிபூரி வியாபாரி. இவரது மகன் விக்னேஷ், 19. இவர்கள் இருவரும் பானிபூரிக்கு தேவையான பொருட்கள் வாங்க, நேற்று காலை, 10:00 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கில் கடைக்கு புறப்பட்டனர். பைக்கை சுரேஷ் ஓட்டி சென்றார். சீலநாயக்கன்பட்டி தனியார் பள்ளி அருகே சென்ற பைக், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், தந்தை, மகன் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, 108 அவசர-கால ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே விக்னேஷ் இறந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் மாலை, 3:00 மணியளவில் இறந்தார். இதுகுறித்து சுரேஷ் மனைவி ஜெயந்தி, 49, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து, கன்டெய்னர் லாரி டிரைவர், ஜார்கண்ட் மாநி-லத்தை சேர்ந்த சோனுகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.