/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் - பைக் மோதல் பெண் ஊழியர் பலி
/
மொபட் - பைக் மோதல் பெண் ஊழியர் பலி
ADDED : செப் 28, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட் - பைக் மோதல்
பெண் ஊழியர் பலி
மேட்டூர், செப். 28-
மேச்சேரி, மல்லிகுந்தம் அசோகன் மகள் புவனேஸ்வரி, 23. இவர், சேலம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு தனது மொபட்டில் மேச்சேரியில் இருந்து ஓமலுார் நோக்கி சென்றார். சிந்தாமணியூர் பிரிவு அருகே தனகோடி, 64, என்பவர் ஓட்டி வந்த பைக் மொபட் பக்கவாட்டில் மோதியது. இதில் கீழே விழுந்த புவனேஸ்வரிக்கு தலையில் பலத்த அடிபட்டது.
படுகாயம் அடைந்த அவர், கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு உயிரிந்தார். மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.