/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் கட்சிகள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்
/
பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் கட்சிகள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்
பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் கட்சிகள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்
பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் கட்சிகள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 30, 2025 02:29 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 3,264 ஓட்டுச்சாவடிகளில், 15,01,096 ஆண் வாக்காளர்; 15,29,075 பெண் வாக்காளர், 366 மூன்றாம் பாலினத்தவர் என, 30,30,537 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, முன்னேற்பாடு பணி, பயிற்சி, அச்சடித்தல் பணி, நவ., 3 வரையும், கணக்கீட்டிற்கான காலம், 4ல் தொடங்கி, டிச., 4 வரையும் நடக்க உள்ளது.
ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைத்தல், டிச., 4, கட்டுப்பாடு அட்டவணையை மேம்படுத்தல், வரைவு பட்டியல் தயாரித்தல் டிச., 5 முதல், 8 வரை நடக்க உள்ளது. மறுநாள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஏற்புரை, மறுப்புரை விண்ணப்பம், 2026 ஜன., 8 வரை ஏற்கப்படும். கணக்கீட்டு படிவம் மீதான முடிவு மேற்கொள்ளுதல், ஏற்புரை, மறுப்புரை மீதான தீர்வு காணுதல் பணி, ஜன., 9 முதல், 31 வரை, ஓட்டுப்பதிவு அலுவலரால் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட, பிப்., 3க்குள், கமிஷன் ஒப்புதல் பெற்று, பிப்., 7ல் வெளியிடப்படும்.
அதற்கு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து கொடுக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் சிறப்பு உதவி மையமான, 1950ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

