தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 இடங்களில் தீ: அசம்பாவிதம் தவிர்ப்பு

2 இடங்களில் தீ: அசம்பாவிதம் தவிர்ப்பு

2 இடங்களில் தீ: அசம்பாவிதம் தவிர்ப்பு


ADDED : ஜூலை 27, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: தலைவாசல், சதாசிவபுரத்தை சேர்ந்த, விவசாயி ராமச்சந்திரன், 42. அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில், 2 ஏக்கரில் தைல மரங்களை வளர்க்கிறார். அங்கு நேற்று மதியம், 12:30 மணிக்கு, தோட்டம் வழியே செல்லும் மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து தீப்பற்றியது.

இதுகுறித்து மதியம், 12:44 மணிக்கு தகவல் கிடைக்க, 1:00 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஒரு பகுதி புற்கள், தைல மரங்கள் எரிந்-தன. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல் நரசிங்கபுரம், தெற்கு காட்டை சேர்ந்த பிரகாஷ், அதே பகுதியில் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார். அங்கு நேற்று இரவு, 8:30 மணிக்கு தீப்பற்ற, தகவல் அறிந்து, 10 நிமிடத்தில் அங்கு சென்ற, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தேங்காய் நாரின் ஒரு பகுதி எரிந்து நாசமானது. ஆத்துார் டவுன் போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us