தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் திறன் மேம்பாடு செயல்முறை பயிற்சி

'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் திறன் மேம்பாடு செயல்முறை பயிற்சி

'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் திறன் மேம்பாடு செயல்முறை பயிற்சி


ADDED : ஜூலை 27, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், மயக்க மருந்தியல் பிரிவு மூலம், தொழில்துறை சார்ந்த, சமீபத்திய வளர்ச்சி குறித்த திறன் மேம்-பாடு விரிவுரை, செயல்முறை பயிற்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, கல்லுாரி வளாகத்தில் நடத்தப்பட்-டது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான, சென்னை, எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின், மயக்க மருந்து பிரிவு ஆலோசகர் அமிர்த பிரகாஷ், மயக்க மருந்துகள் மற்றும் அறுவை அரங்க பிரிவில் சமீபத்திய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு

எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மயக்க மருந்து பிரிவில் உபகரணங்களை கையாளும் நெறிமுறைகள் குறித்து செயல்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. இதில் கல்லுாரியின் மயக்க மருந்துகள் மற்றும் அறுவை அரங்க பிரிவு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும் துறை சார்பில் மாண-வர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்க-ளுக்கு பரிசு, சான்றிதழ்

வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரியின் மயக்க மருந்தியல் பிரிவு பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் விக்-னேஸ்வரா, முத்தமிழ் செல்வன், தீக்ஷிகா மற்றும் குமரகுருதாசன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us