/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி
/
பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி
ADDED : அக் 14, 2024 04:52 AM
சேலம்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி, பூக்கள் தேவை அதிகரித்து இருந்தது. இதனால் அதன் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை முடிந்ததால் சேலம் வ.உ.சி., பூ மார்க்-கெட்டில் நேற்று பூக்கள் விலை சரிந்தது. அதற்கேற்ப வியாபா-ரிகள் கூட்டமும் குறைந்து காணப்பட்டது. கடந்த, 10ல் கிலோ, 1,000க்கு விற்ற மல்லி நேற்று, 300 ரூபாயாக சரிந்தது.
அதேபோல், 600க்கு விற்ற முல்லை, 120; 280க்கு விற்ற ஜாதி-மல்லி, 260; 280க்கு விற்ற காக்கட்டான், 60; 240க்கு விற்ற கலர் காக்கட்டான், 60; 300க்கு விற்ற மலை காக்கட்டான், 600 ரூபாய் என குறைந்தது. மேலும், 300க்கு விற்ற சம்பங்கி, 40; 400க்கு விற்ற சாதா சம்பங்கி, 60; 350க்கு விற்ற அரளி, 40; 350க்கு விற்ற வெள்ளை அரளி, 40; 450க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்-வரளி தலா, 100; 260க்கு விற்ற நந்தியாவட்டம், 20, 100க்கு விற்ற சின்ன நந்தியாவட்டம், 50 ரூபாய் என விலை வெகுவாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது.