/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உணவு பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
/
உணவு பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 07, 2025 01:40 AM
ஜலகண்டாபுரம், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மூலம், ஜலகண்டாபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு, உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.
நங்கவள்ளி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சோனியா, உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டம், உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் காய்கறி, பழங்களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கையாளும் விதம் குறித்து விளக்கினார்.
சிறப்பு பயிற்சியாளர் ஹரிஹரன், செயற்கை நிறம் ஏற்றப்பட்ட மற்றும் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட காய்கறி, பழங்களை விற்பது சட்டப்படி குற்றம் என்றும், அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்பதை விளக்கினார். சந்தை நிர்வாக அலுவலர் உதயகுமார்(பொ), 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.