/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேவாலயம் புனரமைப்பு மானியம் பெற வாய்ப்பு
/
தேவாலயம் புனரமைப்பு மானியம் பெற வாய்ப்பு
ADDED : ஆக 07, 2025 01:40 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க, மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு ஆலயங்கள், 10 ஆண்டுக்கு மேல் சொந்த கட்டடங்களில் இயங்கியிருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து எந்த நிதியுதவியும் வாங்கியிருக்க கூடாது. ஒரு ஆலயத்துக்கு மானியத்தொகை வாங்கிய பின், 5 ஆண்டுக்கு மானியம் வேண்டி விண்ணப்பிக்க தகுதி கிடையாது.
ஆலய கட்டட வயது, 10 முதல், 15 ஆண்டு வரை இருப்பின், 10 லட்சம் ரூபாய்; 15 முதல், 20 ஆண்டு வரை, 15 லட்சம் ரூபாய்; 20 ஆண்டுக்கு மேல் இருப்பின், 20 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும். விரும்புவோர், சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 110ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.