/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடனை அடித்துக்கொன்ற வழக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் கைது
/
திருடனை அடித்துக்கொன்ற வழக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் கைது
திருடனை அடித்துக்கொன்ற வழக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் கைது
திருடனை அடித்துக்கொன்ற வழக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் கைது
ADDED : ஜூலை 23, 2025 02:29 AM
மேட்டூர், சேலம் மாவட்டம் கொளத்துார், பாலமலை ஊராட்சி கெம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன், 63. பாலமலை ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது மனைவி ராஜம்மாள், 60. கடந்த, 12 காலை, ராஜம்மாளிடம் நுாதன முறையில், அவரது கம்மலை திருடிக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜவீதி, மாரியம்மன் கோவில் வீதி ராஜா, 32, அவரது சித்தப்பா மகன் அண்ணாமலை ஆகியோர் பைக்கில் தப்பினர்.
அடிவாரம் உள்ள கண்ணாமூச்சிக்கு சென்றபோது, பாலமலை கிராம மக்கள், திருடர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது சிலர், திருடர்களை தாக்கியதாக புகார் எழுந்தது. காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனார். இதில் கடந்த, 15ல் அண்ணாமலை உயிரிழந்தார். இதனால், தாக்கியவர்கள் மீது கொளத்துார் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாதப்பன்,
கெம்மம்பட்டி அஜித், 25, ஆகியோரை கைது செய்தனர். நேற்று, கெம்மம்பட்டி ஜெயசூர்யா, 25, சின்னசாமி, 39, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.