/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி அடித்து கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது
/
விவசாயி அடித்து கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது
விவசாயி அடித்து கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது
விவசாயி அடித்து கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது
ADDED : டிச 17, 2024 07:32 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன், 55. இவருக்கும், அருகில் உள்ள குப்புசாமி, 55, குடும்பத்தாருக்கும் விவசாய நிலம் சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிந்தன், நிலத்தை உழுவதற்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது குப்புசாமி மகன் வெங்கடாசலம் சென்று, நிலத்தை உழவு செய்த டிராக்டரை தடுத்துள்ளார். இதனால் கோவிந்தனுக்கும், வெங்கடாசலத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடாசலத்தின் தந்தை குப்புசாமி, தாய்
ராஜாமணி, மனைவி ராஜகிளி ஆகியோர் மரக்கட்டை, கல் ஆகியவை கொண்டு கோவிந்தனை தாக்கியுள்ளனர். இதில் கோவிந்தன்
சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.இதையடுத்து, கோவிந்தனை கொலை செய்ததாக குப்புசாமி, 55, அவரது மனைவி ராஜாமணி, 50, அவரது மகன் வெங்கடாசலம்,
32, மருமகள் ராஜகிளி, 27, என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை நேற்று கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர்.