/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சடை முனியப்பன், பெரியாண்டிச்சி கோவிலில் பழம் படைத்தல் விழா
/
சடை முனியப்பன், பெரியாண்டிச்சி கோவிலில் பழம் படைத்தல் விழா
சடை முனியப்பன், பெரியாண்டிச்சி கோவிலில் பழம் படைத்தல் விழா
சடை முனியப்பன், பெரியாண்டிச்சி கோவிலில் பழம் படைத்தல் விழா
ADDED : டிச 03, 2024 06:58 AM
வீரபாண்டி: சடை முனியப்பன், பெரியாண்டிச்சி கோவில்களில் நடந்த பழம் படைத்தல் விழாவில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஆட்டையாம்பட்டி-திருச்செங்கோடு சாலையில் உள்ள, பழமையான சடை முனி-யப்பன், பெரியாண்டிச்சி
அம்மன், கன்னிமார் சாமிகள், பெருமாள் மற்றும் விநாயகர் என ஒரே வளாகத்தில்
தனித்தனி-யாக கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை
மாதத்தில் பழம் படைத்தல் விழா நடத்தப்படுகிறது. திங்கள் கிழ-மையான நேற்று
நடப்பாண்டு திருவிழா நடந்தது. இதில் சேலம், ஆத்துார், அயோத்தியாபட்டிணம்,
மல்ல சமுத்திரம், நைனாம்-பட்டி, பிச்சம்பாளையம், ஆட்டையாம்பட்டி
சுற்றுவட்டாரங்-களில் உள்ள முனியப்பன் சுவாமியை குலதெய்வமாக கொண்ட
பங்காளிகள் குடும்பத்தினர் வந்திருந்தனர். இவர்கள் சுவாமியை சுத்தம் செய்து,
மாலைகள் அணிவித்து தேங்காய், பழங்களை படைத்து பூஜை செய்தனர்.