/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முழு நேர ரேஷன் கடை ராஜ்யசபா எம்.பி., திறப்பு
/
முழு நேர ரேஷன் கடை ராஜ்யசபா எம்.பி., திறப்பு
ADDED : ஜன 02, 2026 05:08 AM
தலைவாசல்: தலைவாசல், புத்துாரில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டது. அங்கு, 550க்கும் மேற்பட்ட கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் அந்த கடை முழு நேர கடையாக மாற்றப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து, திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.பகுதி நேர கடை
அயோத்தியாப்பட்டணம் அடுத்த தைலானுார் ஊராட்சி குட்-டைக்கரையில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ராஜ்யசபா எம்.பி., சிவ-லிங்கம், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்-றிய செயலர்கள் ரத்தினவேல், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

