/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமி வாந்தியால் மருத்துவமனையில் அனுமதி
/
பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமி வாந்தியால் மருத்துவமனையில் அனுமதி
பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமி வாந்தியால் மருத்துவமனையில் அனுமதி
பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமி வாந்தியால் மருத்துவமனையில் அனுமதி
ADDED : மே 03, 2025 01:35 AM
ஓமலுார்:
பல்லி கிடந்த, 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமிக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர், காவேரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 40. கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 38. இவர்களது மகள்கள் ப்ரியதர்ஷினி, 16, தேவதர்ஷினி, 14. இவர்கள் மேட்டூர் அரசு பள்ளியில் படிக்கின்றனர். இருவரும் நேற்று முன்தினம், ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியில் உள்ள கோவில் பண்டிகைக்கு, உறவினர் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது சிறுமிகளின் சகோதரர் பாலமுருகன், 20, ஓமலுார் அலங்கார் தியேட்டர் அருகே உள்ள பேக்கரியில், 'ஸ்வீட் பீர்' எனும் குளிர்பான பாட்டில்கள், 4 வாங்கினார். தொடர்ந்து வீட்டுக்கு சென்று குடும்பத்தினர், சிறுமிகள் குடித்தனர். ப்ரியதர்ஷினி குடித்தபோது, பாட்டிலில் சிறு உருவம் அவரது வாயில் பட்டதும் துப்பியுள்ளார். பாட்டிலில்
இருந்ததை எடுத்து பார்த்தபோது, பல்லி அல்லது அரணை போல் தெரியவந்தது. உடனே பாட்டிலுடன், வாங்கிய கடைக்கு சென்று புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, ப்ரியதர்ஷினிக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால், அவரை ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் ஓமலுார் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவி, குளிர்பான கடையில் விசாரித்தார். மேலும் சம்பவம் குறித்து, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

