/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோல வியாபாரி வீட்டில் நகை திருடிய சிறுமி கைது
/
கோல வியாபாரி வீட்டில் நகை திருடிய சிறுமி கைது
ADDED : நவ 26, 2025 01:55 AM
சேலம், சேலம், கன்னங்குறிச்சி ரத்தினா நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி மலர்விழி, 40. இவர்கள் வீடுகள் தோறும் சென்று கோல மாவு விற்கின்றனர். அவர்கள் வீட்டில், கடந்த, 23ல், 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு, லேப்டாப் காணாமல் போனது. தம்பதிக்கு, அதே பகுதியில் வசிக்கும், 17 வயது சிறுமி மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரித்தபோது, 2.5 பவுன் நகையை, சிறுமி வழங்கியுள்ளார். மீதி நகை, கொலுசு, லேப்டாப்பை, பின்னர் தருவதாக தெரிவித்தார். பின் சிறுமி கண்டுகொள்ளவில்லை. இதனால் மலர்விழி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து, சிறுமியிடம் இருந்த, 27,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

