/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : டிச 28, 2025 09:23 AM
இடைப்பாடி: கார்த்திகை, மார்கழியில் ஏராளமானோர் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் வீடுகளில், அசைவ உணவுகளை தவிர்க்கின்-றனர். இதன் எதிரொலியாக, கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தையில், சில வாரங்களாக விற்பனை சரிந்தது. இந்நிலையில் நேற்று கூடிய சந்தையில், கடந்த வாரத்தை விட, 250 ஆடுகள் அதிகமாக, 1,950 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. விலையும் கடந்த வாரத்தை விட, ஆடுக்கு, 300 ரூபாய் வரை அதிக-ரித்தது. அதன்படி, 10 கிலோ வெள்ளாடு, 9,100 முதல், 9,450 ரூபாய்; 10 கிலோ செம்மறியாடு, 8,750 முதல், 9,150 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
ரூ.43 லட்சத்துக்கு பருத்திகொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,553 மூட்டைகளை கொண்டு
வந்தனர். கடந்த வாரம், 7,450 ரூபாய்க்கு விற்ற, பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, நேற்று, 441 ரூபாய் விலை குறைந்து, 7,009 முதல், 8,320 ரூபாய் வரை விலை போனது. அதேபோல், 8,200 ரூபாய்க்கு விற்ற டி.சி.எச்., ரக மூட்டை, நேற்று, 139 ரூபாய் விலை அதிகரித்து, 8,339 முதல், 9,099 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 43.31 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

