/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒலிம்பிக்கில் தங்கம் மாணவரின் லட்சியம்
/
ஒலிம்பிக்கில் தங்கம் மாணவரின் லட்சியம்
ADDED : பிப் 21, 2024 07:26 AM
ஆத்துார், : டில்லியில், 3வது வாகோ இந்தியா, சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி, கடந்த, 7 முதல், 13 வரை நடந்தது. அதில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த, தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ராஜா, 14, தங்கம் வென்றார். நேற்று அவருக்கு தனியார் பள்ளியில், பாராட்டு விழா நடந்தது.
தொடர்ந்து ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்தாண்டு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றேன். டில்லியில் நடந்த சர்வதேச போட்டியில், 47 கிலோ பிரிவில், 3 பிரிவுகளாக, கஜகஸ்தான், ஈராக், துருக்கி நாடுகளுடன் போட்டியிட்டு தங்கம் வென்றேன். ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கம் பெறுவதே லட்சியம்,'' என்றார்

