/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி பண்டிகையன்றும்தங்கம் விலை ஏறுமுகம்
/
தீபாவளி பண்டிகையன்றும்தங்கம் விலை ஏறுமுகம்
ADDED : நவ 01, 2024 02:00 AM
தீபாவளி பண்டிகையன்றும்தங்கம் விலை ஏறுமுகம்
சேலம், நவ. 1-
தீபாவளியன்று தங்கம் வாங்க பலரும் விரும்புவதால் சேலத்தில் உள்ள நகை கடைகள் நேற்றும் திறந்திருந்தன. சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன்தினம் 22 காரட் தங்கம் கிராம், 7,380 ரூபாய், பவுன், 59,040 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 75 ரூபாய், பவுனுக்கு, 600 ரூபாய் உயர்ந்தது. அதன்படி கிராம், 7,455 ரூபாய், பவுன், 59,640 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனாலும் நகை கடைகளில் ஏராளமானோர் நகைகளை வாங்கினர். தீபாவளி பண்டிகை மட்டுமின்றி முகூர்த்த சீசன் தொடங்கியதால் தங்கம் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருவதாக, நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

