/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
/
மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 24, 2025 01:47 AM
கெங்கவல்லி, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கெங்கவல்லி வட்டார அளவில், 14, 17 வயதுக்கு உட்பட்டோர் கபடி போட்டியில், தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடி, மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வாகினர்.
குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், மாணவியர் மாலினி, ரிதன்யா, காவியா, தமிழரசி, ஜெயஷினி, விமோனிஷா, அபிஸ்ரீ, சமத்ரா, தன்சிகா, கனிஷ்கா, சிவரஞ்சனி, சுஜித்ரா, திவ்யஸ்ரீ, சங்கவி ஆகியோர் தேர்வாகினர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், சுமித்தா, ஹாசினி, விஷாலினி, சவித்தா, கனிஷ்கா, ரஞ்சனா, நிவேதா, பூமணி, ஹாசினி, சிவானி, ஹரிணி ஆகியோர் தேர்வாகினர்.
இவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் குருநாதன் தலைமை வகித்து, மாணவியரை பாராட்டினார். தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயபால், ரவிசங்கர், உடற்கல்வி ஆசிரியர் எழில்பிரியா, பள்ளி மேலாண் குழுவினரும் பாராட்டினர்.