/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசுப்பள்ளி மாணவர்கள் கழிவறை இன்றி அவதி
/
அரசுப்பள்ளி மாணவர்கள் கழிவறை இன்றி அவதி
ADDED : நவ 02, 2024 04:25 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
அங்கு, குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாண-வர்களின் கழிவறை பராமரிப்பு இல்லாமல், உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் வசதி இல்லாததால், பயன்படுத்த முடியவில்லை.வகுப்பறை பின்புறத்தில் திறந்தவெளியில் மாணவர்கள் சிறுநீர் கழிக்கின்றனர். சிலர் இயற்கை உபாதை ஏற்பட்டால், அடக்கி வைத்து வீட்டிற்கு சென்ற பின், வெளியேற்றுகின்றனர். இதனால், மாணவர்கள் பல்வேறு வயிறு தொடர்பான பிரச்-னைக்கு ஆளாகி, அவதிப்படுகின்றனர்.
கடந்த, 29ல், விலையில்லா சைக்கிள் வழங்க பள்ளிக்கு வந்த சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரனிடம், மாணவர்களின் தேவைக்கு ஏற்ப, கழிவறை கட்டுவதற்கு ஆவணம் செய்யும்படி, பள்ளி நிர்-வாகம் சார்பில் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.