/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியரிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
/
மாணவியரிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 4, 5ம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம், ஆசிரியர் சில்மிஷம் செய்வதாக, தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது. அவர், ஓமலுார் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், அதே பள்ளியில் பணியாற்றும், திருநெல்வேலி மாவட்டம், வடுகன்பட்டியை சேர்ந்த ஆசிரியர் தங்கவேல், 43, சில்மிஷம் செய்தது தெரிந்தது. இதனால், அவரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.