/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலியல் கட்டப்பஞ்சாயத்து பி.டி.ஏ., தலைவரை கைது செய்ய 'கிரீன் சிக்னல்' கிடைக்க-லையா?
/
பாலியல் கட்டப்பஞ்சாயத்து பி.டி.ஏ., தலைவரை கைது செய்ய 'கிரீன் சிக்னல்' கிடைக்க-லையா?
பாலியல் கட்டப்பஞ்சாயத்து பி.டி.ஏ., தலைவரை கைது செய்ய 'கிரீன் சிக்னல்' கிடைக்க-லையா?
பாலியல் கட்டப்பஞ்சாயத்து பி.டி.ஏ., தலைவரை கைது செய்ய 'கிரீன் சிக்னல்' கிடைக்க-லையா?
ADDED : பிப் 16, 2025 03:55 AM
ஆத்துார்: பாலியல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய புகாரில், பி.டி.ஏ., தலைவர் குறித்த ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதால், அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது போலீசாருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசு பள்ளியில், 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அதே பள்ளி பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர் கைதாகி, சேலம் கூர்-நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசா-ருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த, தலைமை ஆசிரியர் முத்-துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்ரியாவை கைது செய்து, சேலம், 'போக்சோ' நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அவர்கள், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதில் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக கூறப்படும், தி.மு.க.,வை சேர்ந்த, பி.டி.ஏ., தலைவர் ஜோதி, நேற்று ஆத்துார் மகளிர் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் போலீசார், 4 மணி நேரம் விசாரித்து அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பி.டி.ஏ., தலைவர் ஜோதி, கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக, பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, 'சம்மன்' கொடுத்து, ஜோதியிடம் விசாரணை நடந்தது. மறுவிசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான புகாருக்கு-ரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதை பொறுத்து நடவடிக்கை இருக்கும்' என்றனர்.
சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ''வழக்கு தொடர்பான அறிக்கை போலீசாரிடம் பெறப்பட்டு, தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீதும், துறை நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்,'' என்றார்.
பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் தி.மு.க.,வை சேர்ந்தவர் என்-பதால், அவரை கைது செய்வதில் போலீசார் ஆர்வம் காட்ட-வில்லை என , எதிர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரம் ஆதாரங்கள் சேகரித்துள்ள போலீசாருக்கு, அவரை கைது செய்வதற்கு, 'கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.