/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை விற்றவருக்கு 'குண்டாஸ்'
/
போதை மாத்திரை விற்றவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஏப் 24, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் விக்ரம் என்ற குஜாலி. இவர் கடந்த மார்ச், 28ல், கிச்சிப்பாளையம், அந்தேரிப்பட்டியை சேர்ந்த சக்தி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாயை பறித்தார்.
கிச்சிப்பாளையம் போலீசார், குஜாலியை கைது செய்தனர். அவர் மீது, 2023, 2025ம் ஆண்டுகளில், கொலை முயற்சி, போதை மாத்திரை விற்ற வழக்குகள் இருந்தன. இதனால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.