/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா விற்றவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா விற்றவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : நவ 12, 2025 01:21 AM
சேலம், சேலம், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரிச்சாலை, அம்மன் நகரை சேர்ந்தவர் சதீஷ், 29. கடந்த அக்., 14ல், அம்பாள் ஏரிச்சாலை, மாநகராட்சி கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அவரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து, 1.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரியில், சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். மேலும் சதீஷ், ஏற்கனவே, 2020, 2022ம் ஆண்டுகளில் குண்டாசில் கைது செய்யப்பட்டார். தற்போது, 3ம் முறை குண்டாஸ் பாய்ந்தது.
3 பேர் கைது
வீராணம் போலீசார், சீரிக்காடு சுடுகாடு அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது, 3 பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. பின் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், இளம்பிள்ளை, தப்பக்குட்டை, சின்ன மாரியம்மன் கோவில் காலனியை சேர்ந்த ராஜ், 27, மாசிநாயக்கன்பட்டி அஜித், 24, இடைப்பாடி அருகே மெய்யம்பாளையம் செல்வமணி, 22, என தெரிந்தது. அவர்களிடம், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது
செய்தனர்.

