/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு
/
முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 12, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், முதலாம் உலகப்போரில், இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் சேலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இன்றும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நினைவு சின்னமாக வைத்து பராமரித்து வருகின்றனர். முதலாம் உலக போர் நினைவு நாளான நேற்று, அந்த வீரர்கள் கல்வெட்டுக்கு, டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமையில் சேலம் வரலாற்று சங்கம் உள்பட பல்வேறு அமைப்
புகளை சேர்ந்த நிர்வாகிகள், மலர் வளையம் வைத்து ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

